Friday, January 31, 2014

புண்ணியகாலங்களில் தோன்றும் சாளக்கிராமம் !!!!





பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. இந்தப் பகுதி தான் சாளக்கிராமம் என்றழைக்கப்படுகிறது.
இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல் அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இங்குள்ள மூர்த்தியும் சாளக்கிராம வடிவத்தினர்தான்.
மூலவர் - ஸ்ரீமூர்த்தி                   வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.தாயார் - ஸ்ரீதேவி
தீர்த்தம் - சக்ர தீர்த்தம்                  கண்டகி நதி
விமானம் - கனக விமானம்காட்சி கண்டவர்கள் - பிரம்மா, சிவன், கண்டகி. 

சிறப்புக்கள் ----------------* சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக் கூடு, சங்கு போன்ற பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன. 
* மஹாவிஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து அதன் கர்ப்பத்தை அடைந்து அங்கு ரீங்காரமான சப்தத்தில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பலவிதமான சுருள் ரேகையுடன் கூடின பல சக்கரங்களை வரைந்து பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை (அதாவது தனது அவதார ரூபங்களை) பல வடிவங்களில் விளையாட்டாக வரைந்து வெகு காலத்திற்கு அங்கேயே இருந்து பின் மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. இப்பேர்ப்பட்ட வடிவங்களே நாம் சேவிப்பதற்கு உகந்தவையாகும். இவைகளில் ஸ்ரீமந் நாராயணனின் ஜீவரூபம் கலந்திருப்பதாக ஐதீஹம். இந்நிகழ்ச்சி (சாளக்கிராம உற்பத்தி) தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஐதீஹம். 
* சாளக்கிராமங்கள் உருண்டையான வடிவத்திலும் தட்டையான வடிவத்திலும் முக்கோணத்தில் பாதிக் கூறான அரை முக்கோண வடிவிலும் சங்கு, நத்தைக் கூடு வடிவிலும் சுருள் சுருளான ரேகைகளுடன் கூடினதாகவும், துவாரங்களுடன் கூடினதாகவும், இன்னும் வடிவு சொல்லவியலாத சில வடிவங்களிலும் தோன்றுகின்றன. இங்குள்ளவர்கள் இதனைச் சாளக்கிராவா என்று அழைக்கின்றனர். 
* சாளக்கிராமங்கள் எந்தவிதமான வண்ணத்தில் அமைந்துள்ளனவோ, அந்த ரூபங்கொண்ட விஷ்ணுவாசம் செய்யும் ஸ்தலமாகவே அவைகள் கருதப்படுகின்றன.
A. வெண்மை நிற சாளக்கிராமம் - வாசுதேவ க்ஷேத்திரம் B. கருமை நிற சாளக்கிராமம் - விஷ்ணு க்ஷேத்திரம் C. பச்சை நிற சாளக்கிராமம் - ஸ்ரீநாராயண க்ஷேத்திரம் D. பசும்பொன் (அ) மஞ்சள் கலந் சிகப்பு நிற சாளக்கிராமம் - ஸ்ரீநரசிம்ம க்ஷேத்திரம் E. மஞ்சள் நிற சாளக்கிராமம் - வாமன க்ஷேத்திரம் F. கருநீல நிற சாளக்கிராமம் - ஸ்ரீகிருஷ்ண க்ஷேத்திரம் 

* சாளக்கிராமங்களின் வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜாபலன்களும் மாறுபடுகின்றனவாம். 
நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் பச்சை - பலம், தைரியம் வெண்மை - ஞானம், பக்தி, மோட்சம் கருப்பு - புகழ், பெருமை புகை நிறம் - துக்கம், தரித்திரம் 

* சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமன்றி அவற்றில் 14 உலோகங்கள் (உலோகங்களின் சக்திகள்) இருப்பதாகக் கூறப்படுகிறது. 
* பூஜிக்கப்பட்ட சாளக்கிராமங்களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளவேண்டுமென்பது நியதி. 
* சாளக்கிராமங்களை பால் அல்லது அரிசி மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் அதன் எடை முன்பு இருந்ததை விட கூடுதலாக இருக்கும். 
* துண்டிக்கப்பட்டிருந்தாலும் அல்லது விரிந்து போனதாய் இருந்தாலும் சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை. 
* சாளக்கிராமம் உடைந்திருந்தாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும். 
* சாளக்கிராமம் விற்பனை செய்வதை வாங்குதல் நன்றன்று.பெரியவர்களின் கையிலிருந்து வாங்குதல் நன்று அல்லது பிறரால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தைப் பெற்றுக் கொள்வதும் நன்று. 
* நேபாளத்தில் கடைத்தெருவில் இதைக் குவித்து வைத்து விற்கிறார்கள். இதன் மீது புனித நீரை தெளித்துப் பூக்களைச் சொரிந்து புனிதப் படுத்தி விற்கிறார்கள்.இருப்பினும் இங்கிருக்கும் பெரியவர்கள் அல்லது சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில் வாங்குதல் சிறப்பு. 
* சுமார் 20 ஆண்டுகட்கு முன்பு இராமேஸ்வரத்தில் ஏற்பட்ட ஒரு புயலின் போது கடலில் ஒரு சாளக்கிராமம் கிடைக்க அதனை ஸ்ரீராமர் பாதம் அமைந்திருக்கும் கந்தமான பர்வதம் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் (இராமேஸ்வரம் கோவிலிலிருந்து வடக்கே 5 மைல்) வைக்கப்பட்டுள்ளது.தேங்காயளவு பருமனான இந்தச் சாளக்கிராமத்தில் நரசிம்ம மூர்த்தியின் திருமுகம் ரேகை வடிவில் அமைந்துள்ளது. 
* நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது. இதுதான் சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான் அமைந்துள்ளது. இருப்பினும் காட்மண்டுவிலிருந்து முக்தி நாராயணசேத்திரம் செல்லும் வழியில் உள்ள பூஜைக்குரிய சாளக்கிராமங்கள் உற்பத்தியாகக் கூடிய கண்டகி நதிக் கரையில்அமைந்துள்ள சேத்திரமே சாளக்கிராமமாகும். இவ்விடத்திற்குச் செல்ல நேபாள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. மலையேறிச்செல்ல வேண்டிய சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த யாத்திரையில் 50 பேர்கொண்ட குழுக்களாகச் செல்லவே நேபாள அரசு அனுமதியளிக்கிறது. 
* பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மொத்தம் 12 பாசுரங்களில்மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாக தலைக் கட்டுகிறார். திருமங்கையாழ்வார் ராமனாக காண்கிறார். இத்தலத்திற்கு திருமங்கை உகந்தருளிய பாசுரங்களில் இங்கு எழுந்தருளியிருப்பவன் ராமனே என்று அறுதியிடுகிறார். 
* ஸ்ரீஇராமானுஜர் இங்கு எழுந்தருளியுள்ளார். 
* இங்கு பகவான் தீர்த்த ரூபியாவார். 
* வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்குகந்த எம்பெருமான் இதில் நித்ய அவதாரம் (சாளக்கிராமரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பதும் ஓர் வரலாறு.
* சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. 











































பச்சரிசியை ஏன் தானமாக வழங்வேண்டும் ?                                                                               ************************************************************* 




உணவு வகைகளிலேயே சைவம், அசைவம் என்று உள்ளது போல் காய்கறிகளில் கூட சைவம், அசைவம் என்று முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர்.

அந்த வகையில் தேன், ரத்தத்திற்கு இணையானது என அதர்வண வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. 
ரத்தத்தை வழங்க முடியாதவர்கள் தேனை வழங்கி அதற்குண்டான பலனைப் பெற முடியும். ஹோம குண்டங்களில் தேன் வார்ப்பது தற்போதும் நடைமுறையில் உள்ளது. 

அதேபோல் பேரிச்சம்பழம், மாமிசத்திற்கு சமம் என்றும் பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பச்சரிசி மிகவும் சக்தி வாய்ந்தது. 

திருமணத்தின் போது முனை முறையாத பச்சரிசியைத்தான் அட்சதைக்காக பயன்படுத்த வேண்டும். 
இதனைக் கைக்குத்தல் அரிசி என்றும் கூறுவர். 
எனவே கடைகளில் பச்சரிசி வாங்கி வந்து அட்சதை தயார் செய்வது கூடாது. 
மாறாக விவசாயிகளிடம் சென்று அறுவடையின் போது சேகரித்து வைத்த முனை முறியாத பச்சரிசியை வாங்கி வந்து அட்சதை தயாரிப்பதுதான் சரியான முறையாகும்.

கைக்குத்தல் அரிசியைத்தான் தானமாக வழங்கவும் பயன்படுத்த வேண்டும். 

ஞானத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களுக்கு பச்சரிசியை தானமாக வழங்கினால் சிறந்த பலன் கிடைக்கும். 
இதற்கு காரணம் பச்சரிசிக்கு என்று தனி மகத்துவம் உள்ளது. 
முனை முறியாத பச்சரிசியை உயர்ந்தவர்களுக்கு தானமாக வழங்கினால் அதைக் கொடுப்பவருடைய தோஷங்கள் அனைத்தும் கழிந்துவிடும் என்று பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பூஜைகளுக்கு வாழைப்பழம் (கதளி) பயன்படுத்த வேண்டும். 

கேரளாவில் பகவதி அம்மன் கோயில்களில் கதளி இல்லாமல் பூஜைகள் நடத்தப்படாது. 
பச்சை வாழை, கற்பூர வாழை என பல்வேறு வகையான வாழைகளை பூஜைகளுக்கு யன்படுத்துகின்றனர். 
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்களும், பலன்களும் உள்ளது.
குறிப்பாக பச்சை வாழையை வன / காவல் தெய்வங்களுக்கும், பூவன் வாழையை வீட்டு தெய்வங்களுக்கும் பூஜை செய்ய பயன்படுத்தலாம்.

வாழைக்காய் / பழங்களை கைகளால் தொட்டு அந்தணர்களுக்கு வழங்கும் போது கொடுப்ப்வருக்கு உள்ள கர்ம வினைகள் பாதி தீர்ந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னோர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது கூட வேதம் ஓதும் அந்தணர்களுக்கு வாழைக்காய் / பழம் மற்றும் பச்சரிசி வைத்து வழங்குவர்.

இது சம்பந்தப்பட்ட வீடு (உயிரிழந்தவர்) மற்றும் அதில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் தோஷத்தைப் போக்கவே. 

அந்தணர்களும் அவற்றை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுடைய தோஷத்தை ஏற்றுக் கொண்டு அதை கழிப்பதாகவே பழங்காலத்தில் கருதினர்.

பழங்காலத்தில் ஒரு ஊரில் வசிக்கும் மற்ற குடும்பங்களுக்கு ஏற்படும் தோஷத்தை கழிக்கவே அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர். 

அதற்காக மக்களிடம் இருந்து எதையும் அவர்கள் எதிர்பார்த்ததில்லை. 
மாறாக அந்நாட்டின் அரசன் அந்தணர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள், செல்வங்களையும் அளித்ததாக வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. 

எனவே, முனை முறியாத பச்சரிசி, வாழைப்பழம் ஆகியவற்றிற்கு பல பூர்வீக குணங்கள் உண்டு. 

முக்கியமான சில பூஜைகளின் போது; கலச பூஜை உட்பட முனை முறியாத பச்சரிசியை பயன்படுத்தப்படுவதை தற்போதும் பார்க்கிறோம்.

கோயில்களில் நெய்வேத்தியம் செய்ய முழுக்க முழுக்க பச்சரிசியே பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் மாக்கோலம் இடுவதற்கும் பச்சரிசியை பயன்படுத்தினால் தெய்வீகத்தன்மை கிடைக்கும்.

அட்சய திருதியை தினத்தன்று முனை முறியாத பச்சரிசியை வாங்குவதும், தானமாக வழங்குவதன் மூலமும் லட்சுமியின் அருளைப் பெற முடியும்

Thursday, January 30, 2014

மகிமை வாய்ந்த ராமர் ஜாதகம் 
********************************************








இந்த ராமர் ஜாதகத்தை மகிமை வாய்ந்த பூஜை இடத்தில் எழுந்தருளப்பண்ணி தினமும் பக்தி சிரத்தையுடன், ஆராதித்து வரவேண்டும். 

இந்தப் புனிதமான ராமர் ஜாதகத்தை பூஜிப்பவர்களுக்கும், வைத்திருப்பவர்களுக்கும் ஜாதகரீதியாக இருக்கும் நவக்கிரக தோஷங்கள் விலகுவதுடன் சகலவிதமான பிணிகளும் நீங்கும். 

மேலும் ஐசுவரிய அபிவ்ருத்தியும் ஆயுள் அபிவ்ருத்தியும் ரகுகுல நாயகனின் அருளால் உண்டாகும்.



Thursday, January 23, 2014

மஹாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் 
***************************************************************************************



                                                              ஸ்ரீ தேவிஹி அம்ருதோத்
                                                              பூதா கமலா சந்த்ர சேபாநா
                                                              விஷ்ணு பத்னீ வைஷ்ணவீச
                                                              வராரோஹீ ச ஸார்ங்கிணீ
                                                              ஹரி ப்ரியா தேவ தேவி
                                                              மஹாலக்ஷ?மீ ச ஸுந்தரீ



மகாலஷ்மியின் ஹ்ருதயம் என்ற இதைக் குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். 
வேலை கிடைக்கும்.